ஒன்று இரண்டு மூன்று
ஒன்றாய்க் கூடி விளையாடு
நான்கு ஐந்து ஆறு
நான்கு பக்கமும் பாரு
ஏழு எட்டு ஒன்பது
ஏழு கடலையும் தாண்டு
பத்து எண்ணக் கற்றிடு
பார்த்துப் பதமாய் நடந்திடு
எண்ணம் உயர்வாய் இருக்கட்டும்!
ஏற்றம் தானாய் வந்து விடும்!

What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1