
ஹாய் குழந்தைகளா,
எல்லாரும் எப்படி இருக்கீங்க?
நான் தான் ஷிவானி. நானும் உங்களைப் போல ஒரு குட்டிச் சுட்டிப் பெண் தான்.
எனக்கும் உங்களைப் போல விளையாட, சாக்லேட், ஐஸ்க்ரீம்லாம் சாப்பிட, டிவி பார்க்க, தூங்க ரொம்பப் புடிக்கும்.
தூக்கம்னு சொன்னதும் தான் நியாபகம் வருது.
எங்க அம்மா ஒரு விஞ்ஞானி. அவங்க ஒரு கனவு உருவாக்கும் கைக்கடிகாரத்த உருவாக்கி இருக்காங்க.
நான் தினமும் அந்தக் கடிகாரத்தக் கைல கட்டிக்கொண்டு தான் தூங்கப் போவேன்.
அந்த கடிகாரம், என் மனநிலைய சமன்படுத்தி எனக்குப் பிடிச்ச விசயங்களைக் கனவில் கொண்டு வரும்.
என் கனவில் வர்ற அழகழகான இடங்களை உங்களுக்குச் சுத்திக் காட்ட நான் தயாரா இருக்கேன்.
நீங்களும் தயாரா இருந்தா.. நாம ஒவ்வொரு இதழிலும் என் கனவுக்குள் பயணிக்கலாம்.
அங்க வானத்தில் நடக்கலாம், பூமியில் மிதக்கலாம், விலங்குகளோட பேசலாம், அழகாய் பறக்கலாம்.
சரியா சுட்டீஸ்..? அடுத்த இதழ்ல சந்திப்போம். அது வர இந்த ஷிவானிக்காக காத்திருங்க தங்கம்ஸ்.
…தொடரும்.